கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் ஒன்றிய அரசின் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு திராவிடர் பண்பாட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் ஒன்றிய அரசின் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு திராவிடர் பண்பாட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை திராவிடர் பண்பாட்டு இயக்கம் சார்பாக கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தினை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றன.
இந்த போராட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வு ஆராயும் ஆணையத்தின் மீதான பாஜக நீதிமன்றத்தில் மேற்கொண்டிருக்கின்ற வழக்கு நடவடிக்கை, இந்திய ஒன்றிய அரசால் நடத்தக்கூடிய நுழைவுத் தேர்வுகளுக்கு கண்டனத்தை தெரிவித்தனர்.
கோவை திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தின் சார்பாக நடந்த போராட்டத்தில் ஒன்றிய அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்ற நடவடிக்கை மாணவர்களுக்கும், தமிழ் சமூகத்துக்கும் இழைத்த துரோகமென்றும், சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகளை ஒன்றிய அரசாங்கம் மேற்கொள்வதாக குற்றம் சாட்டினர்.
மேலும், உடனடியாக ஒன்றிய அரசாங்கம் சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கையினை மேற்கொள்வதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் அம்பேத்காரிய, பெரியாரிய, மார்க்ஸிஸ்ட் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.