கோவை: வால்பாறை குடியிருப்பு பகுதியில் பறக்க முடியாத நிலையில் இருந்த பருந்தை மீட்ட வனத்துறையினர் காப்பாற்றி சிகிச்சை அளித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை காமராஜ் நகர் பகுதியில் முட்புதர்கள் அதிகம் இருந்த இடத்தில் பறக்க முடியாத நிலையில் பறவை ஒன்று இருப்பதாக வால்பாறை மனித வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, வனசரகர் ஜெயசந்திரன் தலைமையில் முத்துராஜ், மதன் ஆகிய வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

முள்புதர்கள் அதிகம் இருந்த இடத்தில் பறக்க முடியாமல் இருந்த பருந்தை மீட்டு தண்ணீர் அளித்து முதலுதவி சிகிச்சை அளித்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றினர்.

பின்னர், அதிக குளிர் காரணமாக பருந்து பறக்க முடியாமல் இருந்தது தெரிய வந்தது. சிறிது நேரம் பருந்துவிற்கு வெப்பம் காட்டி பறக்கவிட்டனர்.