திருப்பூரில் திருமணத்துக்கு பெண் இருப்பதாக கூறி கேரள இளைஞர்களிடம் நகை மற்றும் பணம் பறித்த 5 பேர் கைது!

கோவை: திருமணத்துக்கு பெண் இருப்பதாக கூறி, கேரள இளைஞர்களிடம் நகை மற்றும் பணம் பறித்த வழக்கில், திருப்பூரை சேர்ந்த ஐந்து பேரை கேரள மாநில போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: திருமணத்துக்கு பெண் இருப்பதாக கூறி, கேரள இளைஞர்களிடம் நகை மற்றும் பணம் பறித்த வழக்கில், திருப்பூரை சேர்ந்த ஐந்து பேரை கேரள மாநில போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்துார் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்பவர் திருமணத்துக்கு பெண் பார்த்து வந்தார். கேரள மாநில பத்திரிகையில் மணப்பெண் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் விளம்பரம் செய்து இருந்தார்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து ராமகிருஷ்ணனை ஒருவர் தொடர்பு கொண்டு மணப்பெண் இருப்பதாக அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இதை நம்பி ராமகிருஷ்ணன், கடந்த ஏப். 1-ம் தேதி, தனது நண்பர் பிரவீன் என்பவரை அழைத்துக்கொண்டு காரில் பல்லடம் வந்துள்ளார்.

அப்போது, அலைபேசியில் தொடர்புகொண்ட நபர் இருவரையும் அழைத்துச் சென்று ஒரு வீட்டில் உட்கார வைத்து விட்டு பெண்ணை அழைத்து வருவதாக சென்றனர். சற்று நேரத்தில் எட்டு பேர் கொண்ட கும்பல் இரண்டு பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கட்டி போட்டனர். கத்தியை காட்டி மிரட்டி 7 சவரன் நகை, ஏ.டி.எம்., மில் இருந்த ரூ. 40 ஆயிரத்தையும் பறித்து கொண்டு திருப்பி அனுப்பினர். இதையடுத்து, ஆலத்துார் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

தொடர்ந்து, திருப்பூர் மத்திய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.



கேரள தனிப்படை காவல்துறையினர் பாலக்காடு கஞ்சிக்கோட்டை சேர்ந்த விமல், திருப்பூரை சேர்ந்த பிரகாஷ், சிவா, விக்னேஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய ஐந்து பேரை கைது செய்து பாலக்காடு அழைத்து சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...