வழிபாட்டுத் தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி: கோவையில் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்!

கோவை: தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியதையடுத்து, கோவையில் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியதையடுத்து, கோவையில் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் அதிக தொற்று பாதிப்பு காணப்பட்டது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் படிப்படியான தளர்வுகள் வழங்கப்பட்ட போதிலும் கோவை மாவட்டத்திற்கு தளர்வுகள் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று முதலமைச்சர் தலைமையில் கூடிய ஆலோசனை கூட்டத்தில் வருகிற திங்கள் கிழமையிலிருந்து 5-ம் தேதி முதல் கோயில்கள் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.



கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களான கோவை கோனியம்மன், தண்டுமாரியம்மன், மருதமலை முருகன் கோயில், கோவைபுதூர் ஐயப்பன் கோயில் உட்பட அனைத்து கோயில்களும் இன்று தூய்மைப்படுத்தும் பணியில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, கோவையில் உள்ள முக்கிய கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பள்ளி வாசல்களும் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...