பொள்ளாச்சி அருகே மாவட்ட மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு தடுப்பூசி முகாம்..!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினத்தில், நேற்று மாவட்ட மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினத்தில், நேற்று மாவட்ட மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் நோய்த்தொற்றை கட்டுபடுத்த அரசு சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று, மாவட்ட மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகளுக்கு சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பெரியசாமி, கோட்டூர் வட்டார தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த முகாமில் 430க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் குடும்பத்தாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், கோவை மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து விவசாயிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமில் நடைபெறும் என்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...