கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் 8 கிலோ தங்கம் கடத்தல்..!! 6 பேர் கைது

கோவை: கோவை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்த ஏர் அரேபியா விமானத்தில் 8 கிலோ தங்கம் கடத்தி வந்த 6 பேரை சுங்க இலாகா போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்த ஏர் அரேபியா விமானத்தில் 8 கிலோ தங்கம் கடத்தி வந்த 6 பேரை சுங்க இலாகா போலீசார் கைது செய்தனர்.

தினமும் காலை மாலை என இரண்டு வேளை, சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் கோவை வந்து செல்கிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் சார்ஜாவில் இருந்து புறப்பட்ட ஏர் அரேபியா விமானம் காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தது.

பயணிகள் அனைவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதனை செய்து அனுப்பிய படி இருந்த போது, 6 பேர் மிகவும் அச்சத்தோடும் பார்பதற்கு பதட்டதுடனும் காணப்பட்டதால், சந்தேகம் ஏற்பட்ட சுங்க இலாகா துறையினர் மற்றும் விமான நிலைய காவல்துறையினர் அவர்களை சோதனையிட்டனர். அப்போது கணக்கில் வராமல் மறைத்து எடுத்து வரப்பட்ட 8 கிலோ தங்க நகைகள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், அந்த 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...