கோவையில் கஞ்சா விற்பனையில் சம்பந்தபட்ட 4 வாலிபர்கள் கைது

கோவை: கோவை மாவட்டம் மற்றும் கோவை நகர்ப்புறப் பகுதிகளில் மாணவர்களை குறிவைத்து, போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் மற்றும் கோவை நகர்ப்புறப் பகுதிகளில் மாணவர்களை குறிவைத்து, போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க, மாவட்ட காவல் துறை மற்றும் மாநகர காவல் துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இரவு மற்றும் பகல் நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசார், போதைப்பொருள் கடத்தி வரும் நபர்களை கைது செய்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று கோவில்பாளையம் அடுத்த கீரணத்தம் ஹவுசிங் யூனிட் பகுதியில் கோவில் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் வாகன சோதனை செய்தபோது, வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

அவர்களை மடக்கி விசாரணை செய்ததில், அவர்கள் சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரைச் சேர்ந்த மனோஜ் (21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (25) என தெரியவந்தது. இருவரையும் பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் இரண்டு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், மேலும் நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (20) மற்றும் உடையாம்பாளையம் சபரி நகரைச் சேர்ந்த சிவபிரகாஷ் (22)ஆகிய இருவரிடம் மேலும் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து, போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சாவை கைப் பற்றி, நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...