கோவை: கோவை சிங்காநல்லூர் எஸ் ஐ எச் எஸ் காலனியைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவரிடம், நான்கு பேர் கொண்ட கும்பல் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வீட்டுக்குள் புகுந்து, அவரை தாக்கிவிட்டு 12 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு சம்பவத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்துள்ள நிலையில், வழக்கு குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில், வழக்கில் தொடர்புடைய ஆர்.எஸ். புரம் நியூ ஸ்கீம் ரோடு சேர்ந்த தினேஷ் குமார் 26, சின்னவேடம்பட்டியை சேர்ந்த சரவணகுமார் 26, தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்த அசோக் குமார் 28, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், வழக்கில் தொடர்புடைய கும்பலின் தலைவன் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட குற்றவாளிகள், ஏற்கனவே கோவை மாநகரத்தில் சில இடங்களில் பொதுமக்களை மிரட்டி நகை திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.