கோவை: சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் இன்று அதிகாலை 4-30 மணி அளவில் கோவை பீளமேடு விமான நிலையத்துக்கு வந்தது.

அதில், இருந்து இறங்கி வந்த 6 பேரிடம் குடியுரிமை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அவர்கள் தங்கத்தை பேஸ்ட் வடிவில் கொண்டுவந்தது தெரியவந்தது. சமந்தப்பட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டு, சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 7கிலோ 908 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், கடத்தலில் ஈடுபட்ட ஆறுமுகம், ஹாஜி அப்துல், ஹமீது, மாதவன், சுலைமான், ராஜேந்திரன், டெனி இப்ராஹீம் ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.