கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் இன்று மதியம் கிணத்துக்கடவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கிணத்துக்கடவு, வீரப்பகவுண்டனூர் சாலையில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் தலைமையில் காவலர்கள் வாகன வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த லாரியிலிருந்து இறங்கிய நபர் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டதையடுத்து, அந்த நபரை தடுத்து நிறுத்தி அவர் கையில் வைத்திருந்த பையை ஆய்வு செய்ததில், அதில் 6 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது, அவர் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்பதும், தமிழகத்தில் டாஸ்மாக் கடை மூடப்பட்டு இருப்பதால் அண்டை மாநிலமான கேரளா பகுதியில் இருந்து மது வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.