பொள்ளாச்சி அருகே கணவன் - மனைவி இடையே தகராறு..! கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள கோமங்கலம் பகுதியில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள கோமங்கலம் பகுதியில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுனர் ரமேஷ் (30). அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா (19) இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது.

இந்நிலையில், சரண்யாவுக்கும் அவர் கணவர் ரமேஷுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு ரமேஷ் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். அருகில் இருந்த உறவினர்கள் தீக்காயங்களுடன் இருந்த ரமேஷை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோமங்கலம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து மனைவி சரண்யா மற்றும் அவரது உறவினர்களிடம் கோமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...