திருப்பூரில் பெண் தொழிலாளியுடன் பனியன் நிறுவன உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை!

கோவை: திருப்பூரில் பெண் தொழிலாளியுடன் பனியன் நிறுவன உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் பெண் தொழிலாளியுடன் பனியன் நிறுவன உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் - நெருப்பெரிச்சல், ஜி.என்.பாலன் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார். திருமணமாகாத இவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய பனியன் நிறுவனத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகை செல்வன் மனைவி நிரோஷா என்பவர் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஊரடங்கின் காரணமாக பனியன் நிறுவனம் செயல்படவில்லை.

இந்நிலையில், பிரேம்குமாரின் தாயார் வெளியே சென்றிருந்தார். திரும்ப வந்து கதவை தட்டி நீண்ட நேரமாகியும் திறக்காத காரணத்தால், அருகிலிருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, பிரேம்குமாரும், நிரோஷாவும் இறந்து கிடந்தனர்.



அவர்களின் அருகில் விஷ பாட்டில், செல்போன் ஆகியவை கிடந்தது.



இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார் செல்போன் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...