வால்பாறை அருகே கரடி தாக்கியதில் ஒருவருக்கு படுகாயம் - மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!

கோவை: வால்பாறை அருகே கரடி தாக்கியதில் ஒருவருக்கு லேசான காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: வால்பாறை அருகே கரடி தாக்கியதில் ஒருவருக்கு காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வன விலங்குகள் காணப்படுகின்றன. யானைகள் மற்றும் சிறுத்தைகள் அவ்வப்போது பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு வால்பாறை அருகே வேவர்லி எஸ்டேட் பகுதியில் குடியிருக்கும் சதீஷ் என்பவர் வால்பாறையில் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் வேலை முடித்து விட்டு இரவு சுமார் 7 மணியளவில் இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று உள்ளார்.

அப்போது, வனப்பகுதி அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து கரடி ஒன்று அவர் வாகனத்தின் மீது தாவி தாக்கி உள்ளது. அப்போது அவர் சத்தம் போட்டதால் கரடி அவரைவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.



பின்னர், எஸ்டேட் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்ற அவர், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...