விமானப்படை தளத்தில் டிரோன் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் எதிரொலியாக கோவை விமான நிலையத்தில் சிறப்பு 3 அடுக்கு பாதுகாப்பு!

கோவை: விமானப்படை தளத்தில் டிரோன் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் எதிரொலியாக கோவை விமான நிலையத்தில் சிறப்பு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


கோவை: விமானப்படை தளத்தில் டிரோன் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் எதிரொலியாக கோவை விமான நிலையத்தில் சிறப்பு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் மூலமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு மூன்று அடுக்கு சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டு இரவு பகலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதலால் பயணிகள் சிறப்பு சோதனைக்கு பின்பு அனுப்பப்படுகின்றன.

கோவை விமான நிலையத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில், 'ட்ரோன்' மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால், நாடு முழுவதும் படை தளங்கள், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் தொடர்ச்சியாக, கோவை சர்வதேச விமான நிலையத்திலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான நிலையம் உள்ளே மற்றும் வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும், 'மெட்டல் டிடெக்டர்' மூலம் சோதனை செய்யப்படுகிறது. விமான நிலையம் முகப்பு பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. விமான நிலைய வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய தொழிற்பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்தில் இருந்து, 3 கி.மீ., சுற்றளவுக்கு ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...