கோவை: வால்பாறை சாலைகளில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால், வாகனங்களை மெதுவாக கவனமாக இயக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கு விதித்தது. பொது போக்குவரத்துக்கு தடை செய்து வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. வால்பாறை மலைப்பகுதியில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்ல 30 கிலோ மீட்டர் வனப் பகுதியில் சாலை அமைந்துள்ளது. வால்பாறையில் இருந்து ஆழியாறு வரை வனப் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி, காட்டுப் பன்றிகள், சிங்க வால் குரங்கு, வரையாட்டு குரங்குகள் போன்றவை வாழ்ந்து வருகின்றன.

தற்போது ஊரடங்கு காலம் என்பதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து இல்லாமல் உள்ள நிலையில் வனவிலங்குகள் சுதந்திரமாக சாலைகளில் விளையாடி, உணவு தேடி வருகிறது.

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் அட்டகட்டி, காடம்பாறை பகுதியில் மான், காட்டுப்பன்றி போன்றவை சாலைகளில் பட்டப்பகலில் நடமாடி வருவதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை மெதுவாக இயக்கவும் மிகவும் கவனமாக செல்லுமாறும் வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.