கோவை: கோவை கொடிசியாவின் தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு, தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கு மானியங்களை விடுவித்ததற்கு நன்றியும் கோவையில் கொரோனா பெருந்தொற்று பொதுமுடக்கத்தை முழுமையாக நீக்க வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

கோவை கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தகுதி வாய்ந்த தலைமை மற்றும் நிர்வாகத்தின் கீழ் தொழிற்துறை ஆணையர் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் வணிகத் துறை இயக்குநர் திருமதி சி.ஜி.தாமஸ் வைத்யன், இ.ஆ.ப., மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து கடந்த ஜூன் மாதம் 2ஆம், 3ஆம் தேதிகளில் நடத்திய இரு காணொலி கூட்டங்களில் கொடிசியாவும் பங்கெடுத்துக் கொண்டது. அந்த கூட்டங்களில் மானியத்திற்காக விண்ணப்பித்துள்ள தொழிற்சாலைகளுக்கு ஜூன் 30ஆம் தேதிக்குள் மானியத் தொகை விடுவிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டு தொழிற்துறை ஆணையரால் அறிவிக்கப்பட்டது. அவர் உறுதியளித்தபடியே கோவைக்கு வரவேண்டிய 14 கோடி ரூபாய் மானியத் தொகை விடுவிக்கப்பட்டது. இந்த கொரோனா பெருந்தொற்று சூழலில் தொழிற்சாலைகளுக்கு இந்த நடவடிக்கை பெரும் உதவியாக அமைந்தது. மீதியுள்ள 1.2 கோடி ரூபாய் மானியத் தொகையும் விரைவில் விடுவிக்கப்படும் என்று நம்புகிறோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தொழிற்துறை ஆணையர் அவர்களுக்கும் தொழிற்சாலைகளுக்கு அந்த மானியத் தொகையை விடுவித்தமைக்காக எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த ஏழு வாரங்களுக்கும் மேலாக பொதுமுடக்கத்தின் காரணமாக கோயம்புத்தூரில் எவ்விதமான தொழில் வணிக நடவடிக்கையும் முழுமையாக நடைபெற இயலவில்லை. இந்த பொதுமுடக்கத்தின் காரணமாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு கடுமையான நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகின்றனர். வணிக நடவடிக்கைகள் முற்றிலும் நின்று போன நிலையிலும் தொழில்முனைவோர் கடன் தொகை, வரிகள், மின்கட்டணம், தொழிலாளர் ஊதியம், வாடகை மற்றும் இதர செலவுகளை சமாளிக்க வேண்டிய சிக்கலான நிலையில் உள்ளனர். எனவே, தொழிற்சாலைகள் முழுமையாக இயங்காத வரையில் அவற்றை நடத்துவது என்பது தொழில்முனைவோருக்கு ஒரு பெரும் சுமையாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது.
மேலும், தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் தொழிற்சாலைகளுக்கு எந்தவித நன்மையும் தரவில்லை என்பதோடு, சரியான போக்குவரத்து வசதி போன்றவை இல்லாத நிலையில் வாழ்வாதாரம் இழந்து மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர்.
எனவே, வருகின்ற ஜூலை 5ஆம் தேதி முதல் இந்த பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்து 100% தளர்வுகளை அறிவிக்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தடுப்பூசி நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதோடு, கொரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். கொரோனா பெருந்தொற்று குறித்து எந்வித அச்சமும் இன்றி மக்கள் தங்களுடைய இயல்பான பணி மற்றும் வாழ்க்கைக்குத் திரும்பும் வகையில், தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குமாறு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இந்த கடுமையான சிக்கலில் இருந்து விடுபடும் வகையில், கோயம்புத்தூரில் பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்து 100% தளர்வுகளை அறிவிப்பதற்கான செயல்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.