கோவை: வால்பாறையில் கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்த தொழிலாளியை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது ஆனைமுடி தேயிலைத் தோட்டம் இங்கு வசித்து வருபவர் பெரியசாமி வயது 74. இவர் அங்குள்ள மேலாளரின் பங்களாவில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறார். அவர் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென அவரைத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் அவருடைய இடது கை விரல் மற்றும் கையின் பின்புறம் படுகாயம் ஏற்பட்டது. தற்போது பெரியசாமி முடீஸ் தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி முடீஸ் தேயிலைத் தோட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று கரடி தாக்கி காயமடைந்த தொழிலாளி பெரியசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமியுடன் நகர செயலாளர் மயில் கணேசன் வால்பாறை கூட்டுறவு வங்கித் தலைவர் வால்பாறை வீ.அமீது, தேயிலைத் தோட்ட மேலாளர் மற்றும் மருத்துவர், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.