கோவை: அரசு ஊழியர்களைப் போலவே வாரத்தின் இறுதி நாளில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கோவை மாநகர போலீஸ் ஆணையர் தீபக் தாமோர் தெரிவித்துள்ளார்.

சுழற்சி முறையில் தற்போது போலீஸார் பணியாற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நான்கு நாட்கள் பணிபுரியக்கூடிய காவலர்களுக்கு அரசு ஊழியர்களைப் போலவே வாரத்தின் இறுதி நாளில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கோவை மாநகர போலீஸ் ஆணையர் தீபக் தாமோர் தெரிவித்துள்ளார். கோவை போலீஸாருக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதில் போலீஸாரின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது.
தினமும் இரவு, பகலாக விடுமுறை இல்லாமல் போலீஸார் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த பணிச்சுமையால் பலரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டனர். கோவையில் போலீஸாருக்கு சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நான்கு நாள் பணி செய்யும் போலீஸார், ஒரு நாள் விடுப்பு அளித்து ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. கோவை போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் கூறுகையில், ‘‘போலீஸாருக்கு சுழற்சி முறையில் விடுமுறை வழங்கப்படுகிறது. மற்ற அரசு ஊழியர்களைப் போல், போலீஸாருக்கும் வார இறுதி நாட்களில் விடுமுறை எடுக்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.