கோவையில் இன்று முதல் உழவர் சந்தை திறக்க மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவு..!

கோவை: கொரோனா பெருந்தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உழவர் சந்தைகளையும் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் திறக்க மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


கோவை: கொரோனா பெருந்தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உழவர் சந்தைகளையும் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் திறக்க மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவையில் ஊரடங்கு காரணமாக பல்வேறு நிறுவனங்கள் கடைகள் மூட உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், கொரோனா கட்டுக்குள் வந்து கொண்டுள்ள நிலையில், நேற்று மாலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று முதல் உழவர் சந்தைகள் செயல்படும் என தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உழவர் சந்தைகளையும் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொரோனா பரவல் காரணமாக கோவையில் கடந்த, மே, 10ஆம் தேதி முதல் அனைத்து உழவர் சந்தைகளும் மூடப்பட்டு, வண்டிகள் மூலம் நுகர்வோரிடம் மாநகராட்சி பொறுப்பில் காய், கறிகள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, பாதிப்பு குறைந்துவரும் நிலையில், உழவர் சந்தைகள் நாளை(இன்று) முதல் கட்டுப்பாடுகளுடன் திறக்கலாம். உழவர் சந்தையில் பதிவு செய்த விவசாயிகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து காய்கறிகளை விற்பனை செய்யலாம். கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்கவேண்டும்.

50 சதவிகித கடைகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். இதனை கண்காணிக்க வேளாண் துறை மூலம் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவேண்டியது உழவர் சந்தை நிர்வாகத்தின் பொறுப்பு'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...