கோவை: கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை பேரூராட்சி, சொலவம்பாளையம், மாதம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் முகாமை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை புறநகர் பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மதுக்கரை பேரூராட்சி மரப்பாலம் அரசுப் பள்ளியிலும், சொலவம்பாளையம் ஊராட்சியில் சிக்கலாம்பாளையம் அரசுப் பள்ளியிலும், மாதம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளியிலும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடத்தப்பட்டது.

இதில் ஒவ்வொரு ஊராட்சியிலும் 400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்தநிலையில், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.