கோவை கிணத்துக்கடவு அருகே அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சிங்கையனபுதூரில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சிங்கையனபுதூரில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொரனோ தொற்று பாதிப்பு குறையாத காரணத்தால் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மது பிரியர்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்குச் சென்று மதுபாட்டில் வாங்கி வந்து தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் நேற்று மாலை சிங்கையன்புதூர் பேருந்து நிலையம் முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது, அவ்வழியாக வந்த நபரிடம் சோதனை செய்தபோது, அவரிடம் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் இருந்த 15 குவாட்டர், 4 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனைக்கு கொண்டு வந்த சிங்கையன்புதூர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...