பழங்குடிகளுக்கு நூறு சதவிகித கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை... நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு விருது..!

நீலகிரி: பழங்குடிகளுக்கு நூறு சதவிகித கொரோனா தடுப்பூசி போட்டு இந்திய அளவில் சாதனைப்படைத்ததால் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு இன்று தமிழக அரசு பாராட்டு தெரிவித்து விருது வழங்கியது.


நீலகிரி: பழங்குடிகளுக்கு நூறு சதவிகித கொரோனா தடுப்பூசி போட்டு இந்திய அளவில் சாதனைப்படைத்ததால் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு இன்று தமிழக அரசு பாராட்டு தெரிவித்து விருது வழங்கியது.

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையைவிட இரண்டாம் அலை நீலகிரி பழங்குடிகளையும் வெகுவாக பாதித்தது. எண்ணிக்கை அளவில் மிகக்குறைவாக உள்ள ஆறு வகையான பழங்குடியின மக்களான குரும்பர், ஆளு குரும்பர், இருளர், பணியர், காட்டு நாயக்கர் உள்ளிட்டோரை கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் வகையில் பழங்குடிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தீவிர முயற்சி கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பெரும்பாலான பழங்குடிகள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டியே வந்தனர். இந்த அச்சத்தைக் களையும் வகையில், கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் அரசு தீவிரப்படுத்தி வந்தது. வனத்திலும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் வீடுகளுக்கேச் சென்று சுகாதாரத் துறையினர் இரவு பகலாக தடுப்பூசி செலுத்தி வந்தனர். பலர் சுகாதாரப் பணியாளர்களைப் பார்த்ததும் வனத்தினுள் ஓடி ஒளியும் சூழலும் ஏற்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தின் அசாத்திய முயற்சியால் நேற்று மாலையுடன் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பழங்குடிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே பழங்குடிகளுக்கு 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளது நீலகிரி.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 27,500 பழங்குடிகளில் 21,800 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில் பழங்குடியினர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 சதவிகித இலக்கை எட்டியுள்ளதால், இந்திய அளவில் பழங்குடிகளுக்கு தடுப்பூசி போட்ட மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழகமும் முதல் மாவட்டமாக நீலகிரியும் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியரின் செயலைப் பாராட்டி தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் விருது வழங்கினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...