கோவை: நாடு முழுவதும் இன்று ஜூலை 1 மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள முத்தூஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் முத்தூஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவணகுமார் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் அரிமா சங்கங்கள் மாவட்ட ஆளுநர் குப்புசாமி மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலையால் 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதன் எதிரொலியாக நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக மருத்துவர்களுடைய ஆன்மாக்கள் சாந்தியடைய கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து, முத்தூஸ் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து 500க்கும் மேற்பட்ட நோயாளிகளை 100 சதம் குணப்படுத்திய மருத்துவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து கௌரவிக்கப்பட்டது. மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவணன் சார்பில் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 5 குடும்பங்களுக்கு கல்வி உதவித் தொகையாக ஒரு லட்சம் வழங்கப்பட்டது.
மேலும், சரவணம்பட்டி ஓசனம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மருத்துவமனை இயக்குனர் செல்வகுமார் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பல்வேறு துறை மருத்துவர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இரண்டாம் அலையில் குணம் பெற்ற குடும்பத்தினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.