கோவை: பொள்ளாச்சி அருகே சொகுசு காரில் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய கொண்டுவரப்பட்ட 95 மதுபாட்டில்களை கோமங்கலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி - உடுமலை சாலை அந்தியூர் அருகே கோமங்கலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்ட போது, அதில் 95 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, காரை ஓட்டி வந்த பொன்னாபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரிடம் விசாரித்த போது, கோவை மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்று மது பாட்டில்களை கொண்டு வந்து பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கார் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் சுந்தர்ராஜனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.