கோவை: கோவை காமராஜபுரத்தில் தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புக்கு செல்லும் வழியை அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தீண்டாமைச் சுவர் கட்டியது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் 15 நாட்களுக்குள் பதில் அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை காமராஜபுரம் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பிற்கு செல்லும் வழியை, அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வழியை அடைத்து தூய்மைப் பணியாளர்கள் அவ்வழியாக செல்லாமல் பல ஆண்டுகளாக தடுத்து வந்ததாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அதிமுக நிர்வாகியின் உதவியோடு அங்கு தீண்டாமைச் சுவர் எழுப்பி, சாலையில் இரும்புக் கூடாரம் அமைத்துள்ளதாகவும் அப்பகுதி குடியிருப்பு மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதனால், இரண்டு கிலோ மீட்டர் சுற்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அப்பகுதி மக்கள், பொதுவழியை அடைத்து சுவர் எழுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக சுவரை இடித்து அகற்றி வழிப்பாதையை அமைத்துத் தரவேண்டும் என குடியிருப்பு வாசிகள் தமிழக முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரிடம் கடந்த வாரம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த தீண்டாமைச் சுவர் எழுப்பியது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் 15 நாட்களுக்குள் பதில் அளிக்க, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.