கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கனிம வளத்தை கடத்தி சென்ற லாரி பறிமுதல் செய்து கனிமவளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் பகுதியில் மாவட்ட கனிம வளத்துறை துணை வட்டாட்சியர் மூர்த்தி நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனையிட்ட போது, உரிய அனுமதி இல்லாமல் கனிமவள கற்களை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, லாரி மற்றும் கற்களை பறிமுதல் செய்த கனிம வளத்துறை துணை வட்டாட்சியர் கிணத்துக்கடவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, புகாரின்பேரில் கிணத்துக்கடவு காவல்துறையினர் லாரி ஓட்டுனரான பொள்ளாச்சி ஆழியார் நகர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.