கோவை புறநகர் காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு உடலுடன் பொருத்தும் கேமராக்கள் விநியோகம்!

கோவை: கோவை புறநகர் காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு உடலுடன் பொருத்தும் கேமராக்களை மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் வழங்கினார்.



கோவை: கோவை புறநகர் காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு உடலுடன் பொருத்தும் கேமராக்களை மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணி செல்லும் காவலர்களுக்கு உடலுடன் பொருத்தக்கூடிய கேமராக்கள் வழங்கப்பட்டு வருகிறது. குடிபோதையில் வருவோர் போலீசாருடன் தகராறில் ஈடுபடுவது அல்லது போலீசார் பொதுமக்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் இந்த கேமராக்கள் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 36 காவல் நிலையங்களுக்கும் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு உடலுடன் பொருத்தக்கூடிய கேமராக்களை வழங்க மாவட்ட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.



அதன் முதல்கட்டமாக 15 காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு இந்த கேமராக்களை மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் வழங்கினார். இந்த கேமராக்கள் இரவு நேரங்களிலும் துல்லியமாக வீடியோ காட்சிகளை பதிவு செய்யும் என்பதால் ரோந்து செல்லும் காவலர்கள் இதை பயன்படுத்த மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.



இதன் மூலம் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறும் போது அதை வீடியோ ஆதாரமாக பதிவு செய்ய முடியும் மேலும் காவலர்களும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையும் முதல் கட்டமாக 15 கேமராக்கள் வழங்கப்பட்ட நிலையில், விரைவில் கோவையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...