கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி தமிழகம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வால்பாறையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதன் எதிரொலியாக இன்று தடுப்பூசி போடும் முகாம் நிறுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு மாத காலமாக முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 18-ல் இருந்து 45 வயது வரை என பல்வேறு மக்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வந்தது. வால்பாறை மட்டுமின்றி பல்வேறு தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை வரை தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
தடுப்பூசி போடுவதற்கு மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி இல்லாதது மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போட வேண்டியவர்களும் பாதிப்படைந்துள்ளனர். தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, வால்பாறை பகுதிக்கு தடுப்பூசி வராததால் நாளையும் தடுப்பூசி போட இயலவில்லை என்று வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தெரிவித்துள்ளார்.