கோவை தடாகம் பகுதியில் யானை தாக்கி முதியவர் கவலைக்கிடம்..!

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தடாகம், நரசிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பது வழக்கம் இன்று யானை மிதித்து 75 வயது முதியவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தடாகம், நரசிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பது வழக்கம் இன்று யானை மிதித்து 75 வயது முதியவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

கோவை வனச்சரகம் பெரிய தடாகம் பகுதியில் யானை தாக்கி 75 வயதான முதியவர் லட்சுமணன் என்பவருக்கு இரு கால்கள் முறிந்தது. நேற்று இரவு தோட்டத்திற்குள் வந்த யானையை விரட்டும் போது யானை திரும்பி வந்து தாக்கியதில் இரு கால்களும் முறிந்த நிலையில் இன்று காலை வனத்துறை மற்றும் பொதுமக்களால் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் முதியவர் லட்சுமணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாங்கரை அருகே உள்ள பெரிய தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் 75 வயதான இவர் தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில், இவரது மாந்தோப்பில் நேற்று இரவு ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது. அதனைப் பார்த்த அவர் யானைச்சத்தம் போட்டவாறு யானையை நோக்கி சென்றுள்ளார். இதனையடுத்து யானை அங்கிருந்து சென்றது. தொடர்ந்து லட்சுமணன் யானை சென்றதை அடுத்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திரும்பிச் சென்ற யானை திடீரென லட்சுமணனைத் துரத்தி வந்து தும்பிக்கையால் தட்டிவிட்டு காலில் மிதித்துள்ளது. இதில் அவரது இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்ட நிலையில் சத்தம் போட்டுள்ளார்.

இதனை அடுத்து அந்த யானை அங்கிருந்து சென்றது. இந்தநிலையில், இன்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் லட்சுமணன் வீட்டிற்கு வெளியே படுத்திருப்பதைப் பார்த்து அங்கு சென்றுள்ளனர். அப்போது யானை தாக்கியதில் இரு கால்களிலும் முறிவு ஏற்பட்ட நிலையில் இருந்த லட்சுமணன் குறித்து கோவை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு கால் முறிவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘தடாகம், மாங்கரை, பெரிய தடாகம் பகுதிகளில் தற்போது யானைகள் நடமாட்டம் உள்ளது. எனவே, இரவில் அவசியமின்றி யாரும் வெளியே வரவேண்டாம் யானைகள் ஊருக்குள் வந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தாங்களாகவே யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபடக் கூடாது'' என வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...