கோவையில் அவுட்டுக்காய் வெடித்ததில் நாய் தலை சிதறி பரிதாபமாக இறந்தது..!

கோவை: கோவையில் அவுட்டுக்காய் வெடித்ததில் நாய் தலை சிதறி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் அவுட்டுக்காய் வெடித்ததில் நாய் தலை சிதறி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கோவையில் அவுட்டுக்காய் வெடித்ததில் நாய் தலை சிதறி பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை அப்பியது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில், காட்டுப்பன்றிகளுக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அவுட்டுக்காய் வெடித்து நாய் இறந்தது தெரியவந்தது. உடனடியாக, இதில் சம்பந்தப்பட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் இன்று காலை வழக்கமான ரோந்து பணியில் இருந்தனர். அப்போது பூச்சியூர் அருகிலுள்ள கதிர் நாயக்கன்பாளையம் ரங்கசாமி என்பவரது பட்டா நிலத்தில் வெடிச்சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் அவுட்டுக்காய் வெடித்து தலை சிதறிக் கிடந்த நாயைக் கண்டனர். தொடர்ந்து, அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்ற இரண்டு பேரைப் பிடித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் காட்டுப் பன்றிகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்தது தெரியவந்துள்ளது.

பின்னர், அவர்களிடமிருந்து ஐந்து அவுட்டுக்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சட்டவிரோதமாக வெடி வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் முருகேசன் மீது துடியலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...