கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..!

கோவை: கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் இருந்த லட்சக்கணக்கு மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் தென்னைநார் தீயில் கருகி நாசமாயின.


கோவை: கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் இருந்த லட்சக்கணக்கு மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் தென்னைநார் தீயில் கருகி நாசமாயின.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள முத்துகவுண்டனூரில் கதிர்வேல் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை உள்ளது.



இந்தத் தென்னை நார் தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென தென்னைநார் பிரித்தெடுக்கும் எந்திரத்தில் இருந்து தீ பிடித்துள்ளது, அந்தத் தீ மளமளவென எரிந்து அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னைநார் மற்றும் தேங்காய் மட்டைகள் மீது பரவி தீப்பிடித்து புகை மூட்டமாகக் காணப்பட்டது. இதையடுத்து தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் கிணத்துகடவு, பொள்ளாச்சி பகுதியில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.



சுமார் நான்கு மணி நேரம் ஆகியும் தொடர்ந்து தீப்பிடித்து வருவதால், அருகில் உள்ள கிணறுகளிலிருந்து லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து தீயணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தீவிபத்தில் லட்சக்கணக்கு மதிப்புள்ள எந்திரங்கள் மற்றும் தென்னை நார்கள் தீயில் கருகி நாசமானது.

தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...