வால்பாறையில் தோட்டத் தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம்..!

கோவை: வால்பாறை தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் சார்பில் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கோவை: வால்பாறை தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் சார்பில் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து வால்பாறை தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன... அதில்,

01.07.2021 அன்று தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.400-ம் அகவிலைப்படி 100 புள்ளிக்கு ரூ.200 வழங்கிட தோட்ட அதிபர்கள் முன்வரவேண்டும், 01.07.2021 முதல் சூப்ரவைசர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.14.400-ம் அகவிலைப்படி 100 புள்ளிக்கு ரூ.200 வழங்கிடவும், 01.07.2021 முதல் திறன் படைத்த சி கிரேடு பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 15.ஆயிரமும் அகவிலைப்படி 100 புள்ளிக்கு ரூ.200-ம் வழங்கிடவும், கொழுந்து பறிப்பிற்கான ஊக்க ஊதியம் கிலோ உயர்வு அடிப்படையில் ரூ.2, 3, 5, 10 வழங்கிடவும், வனத்துறை அறிவுரைப்படி குடியிருப்புடன் இணைக்கும் கழிவறை வசதி, அனைத்து நிர்வாகத்தினரும் ஏற்படுத்தித் தரவேண்டும். சட்டப்படி பணிபுரிந்த நாட்களின் அடிப்படையில் தற்காலிகத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட தேயிலைத் தோட்ட நிர்வாக அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் சௌந்தரபாண்டியன் திமுக, யு.கருப்பையா ஐஎன்டியூசி, வீரமணி, கேசவமுருகன், விசிக, எல்.பி.எஃப். வழக்கறிஞர் வினோத்குமார், செந்தில்குமார், ஏஐடியுசி மாணிக்கம், பெரியசாமி, எம்எல்எஃப் கல்யாணி, சிஐடியு பரமசிவம், ஏடபில்யூயூ வர்க்கீஸ், எட்வர்ட், தர்மராஜ், பால்ராஜ், அருணகிரி, கந்தசாமி, ஷாஜு, தங்கவேல், கார்த்திக், செந்தில் முருகன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...