கோவை: நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் உயர்வினைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து பல்லடத்தில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வினைக் கண்டித்தும், உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்தினைக் கண்டித்தும் இவற்றைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்தும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி டி.யூ.சி.சி தொழிற்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்லடம் ஒன்றிய பொதுச்செயலாளர் தனசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கர்ணன் கலந்து கொண்டார். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.