கோவை: மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். விலைவாசிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு தடுப்பூசிகளை விற்பனை செய்யாமல் போதிய தடுப்பூசிகளை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட எம்.பி பி.ஆர்.நடராஜன் தலைமையில் இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, உடனடியாக பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் எனவும் போதிய தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் கோசங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் பி.ஆர் நடராஜன், இடதுசாரி கட்சிகள் எடுத்த முடிவின் அடிப்படையில் 28, 29, 30 ஆகிய தேதிகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
2014ம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற போது பெட்ரோல், டீசல் என்ன விலையோ அதே விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்துவதாக தெரிவித்தார். மேலும், மத்திய அரசு இயற்றிய மூன்று வேளான் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனவும் கொரோனா நிதியாக குடும்பங்களுக்கு 7500 வழங்கிட வேண்டும் என்றார்.
அதேபோல, தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய 12,000 கோடி ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் இந்தியாவில் போலியோ, அம்மை தடுப்பூசி போன்றவை இலவசமாக வழங்கப்பட்ட நிலையில் முதல் முறையாக கொரோனா தடுப்பூசி விலைக்கு விற்பதை ஏற்று கொள்ள முடியாது எனவும் தடுப்பூசிகள் இலவசமாகவே வழங்கப்பட வேண்டும் என்றவர், தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பாரபட்சமின்றி தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.