கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு பொதுமக்கள் போல் சென்று கண்காணித்தனர். அப்போது, அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவது உறுதியானது.
இதனையடுத்து, கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த பஞ்சர் கடை வீதியை சேர்ந்த பிரசாந்த்குமார் (23), பிரபு (30), துாத்துக்குடி, காயல்பட்டிணத்தை சேர்ந்த சபரிமுத்து (29), சிவகங்கை, திருப்பத்துாரை சேர்ந்த வினோத் பாண்டியன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.