கோவை வடவள்ளியில் ஒரே நாளில் இரண்டு வீடுகளில் திருட்டு - ரூ. 77 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை!

கோவை: கோவை மாவட்டம் வடவள்ளியில் ஒரே நாளில் இரண்டு வீடுகளில், 77 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவை மாவட்டம் வடவள்ளியில் ஒரே நாளில் இரண்டு வீடுகளில், 77 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடவள்ளி, அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் நெல்சன் (44). தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 8ம் தேதி, நெல்சனின் மாமனார் உயிரிழந்தார். அவரின் இறுதி சடங்கிற்காக குடும்பத்துடன், குன்னூர் சென்றிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நெல்சனின் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்தது. அருகே வசிப்பவர்கள் உடனடியாக நெல்சனுக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்க்கும்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 ஆயிரம் ரூபாய் பணம், லேப்டாப் திருடு போனது தெரியவந்தது.

இதேபோல, நவாவூர் பிரிவு சிந்து வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (45), தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், குடும்பத்துடன் பொள்ளாச்சியில் உள்ள தனது தோட்டத்துக்குச் சென்று விட்டார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவை உடைத்து, பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த, வெள்ளியிலான தட்டு, விளக்கு, குடம் உள்ளிட்ட, 3 கிலோ வெள்ளி பொருட்களும், பீரோவில் வைத்திருந்த, 7,000 ரூபாயும் திருடு போனது தெரியவந்தது.

இதனையடுத்து, இவ்விரு கொள்ளை சம்பவங்கள் குறித்தும் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...