கோவை: கோவை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசியை, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.

பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்.ஐ., மருது மற்றும் போலீசார் கோவை ஆர்.எஸ்.புரம் - சீரநாயக்கன்பாளையம் சந்திப்பில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆம்னி காரை சோதனையிட்ட போது ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவது தெரிய வந்தது.
இதனையடுத்து, ஆம்னி காரில் வந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் கூறுகையில், 'குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு கூடுதல் இயக்குனர் மற்றும் எஸ்.பி., உத்தரவின் பேரில், வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆர்.எஸ்.புரம் - சீரநாயக்கன்பாளையத்தில் ஆம்னி காரை பரிசோதனை செய்த போது, 300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், கடத்தலில் ஈடுபட்ட கேரளா சித்தூர் தாலுகா, மேனான்பாறை வளையக்காரன் சள்ளா பகுதியை சேர்ந்த அரவிந்தாக்சன் (39), கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த ஆனந்த் (29) ஆகியோரை கைது செய்து விசாரிக்கிறோம் என்றனர்.