கோவை: கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மக்கள் நலக்குழு கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடந்தது.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு புதிய உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்டது. டிசம்பர் இறுதியில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கூட்டம் நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது, தொற்று குறைந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், ஆதிதிராவிடர் பிரிவின் கீழ் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகள் குறித்து அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நான்கு வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது. மூன்று வழக்குகளுக்கு மேலும் விசாரணை அவசியம் என்பதால் நிலுவையில் வைக்கப்பட்டது.
மேலும், இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், சுகுணா கல்லுாரி பேராசிரியர் அன்புசிவா, பாரதியார் பல்கலை பேராசிரியர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.