கிணத்துக்கடவு வழியாக ராமேஸ்வரம், தாம்பரம் பகுதிக்கு ரயில் இயக்க வேண்டும்... வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு..!

கோவை: கிணத்துக்கடவு வழியாக ராமேஸ்வரம், தாம்பரம் பகுதிக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என, ரயில்வே சேலம் கோட்ட மேலாளரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை: கிணத்துக்கடவு வழியாக ராமேஸ்வரம், தாம்பரம் பகுதிக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என, ரயில்வே சேலம் கோட்ட மேலாளரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி இடையே உள்ள அகல ரயில் இருப்புப்பாதை தன்மைகள் குறித்து இன்று நவீன ரயில் மூலம் சேலம் கோட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, கிணத்துக்கடவு ரயில் நிலையத்திற்கு வந்த சேலம் கோட்ட மேலாளரிடம் கிணத்துக்கடவு வியாபாரிகள் சங்கம் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியதாவது:- ‘‘மேட்டுப்பாளையத்திலிருந்து கிணத்துக்கடவு வழியாக ராமேஸ்வரம் பகுதிக்கும் மற்றும் மேட்டுப்பாளையத்திலிருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரத்திற்கு ரயில்கள் இயக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை கிணத்துக்கடவு வியாபாரிகள் சங்க செயலாளர் தமிழ்ப்பித்தன் மற்றும் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் மோகன்குமார், தங்கவேல், மணி ஆகியோர் வழங்கினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...