பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் கல்லூரி மாணவி சந்தியாவிற்கு ‘கல்பனா சாவ்லா' விருது..!

கோவை: மதுக்கரை பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் கல்லூரி மாணவி சந்தியாவிற்கு ‘கல்பனா சாவ்லா விருது' வழங்கப்பட உள்ளது. சந்தியாவை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: மதுக்கரை பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் கல்லூரி மாணவி சந்தியாவிற்கு ‘கல்பனா சாவ்லா விருது' வழங்கப்பட உள்ளது. சந்தியாவை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வாழ்த்து தெரிவித்தார்.

மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட மாவுத்தம்பதி ஊராட்சியில் சின்னாம்பதி எனும் பழங்குடியினர் கிராமம் உள்ளது. மலைவாழ் மக்கள், 82 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் சண்முகத்தின் மகள் சந்தியா, இக்கிராமத்தின் முதல் பட்டதாரி. இவர் கடந்த, 2017ஆம் ஆண்டு முதல் அப்பகுதியைச் சேர்ந்த, 20-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடங்களைக் கற்றுக்கொடுத்து வருகிறார்.

இவரது பள்ளி செயல்படுவது, தற்போது இவரது குடும்பத்தினர் குடியிருக்க கட்டப்பட்டுவரும் வீட்டில்தான். இதுகுறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதனையறிந்த மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்றார். சந்தியாவிடம் படிப்பு, கற்றுக்கொடுக்கும் ஆர்வம், வீட்டின் கட்டுமான பணி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, திருக்குறள் உள்பட ஐந்து புத்தகங்களை பரிசளித்து வாழ்த்தினார். மேலும், இவ்வாண்டு சுதந்திர தினத்தன்று ‘கல்பனா சாவ்லா விருது' வழங்கப்படும் எனவும் கூறிச்சென்றார். சந்தியாவை ஊராட்சித் தலைவர் கோமதி, அவரது கணவர் செந்தில்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வாழ்த்தினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...