கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் முழு கட்டுப்பாட்டுக்கு வராத நிலையில், ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து கோவை கோர்ட்டில் 50 சதவிகித ஊழியர்கள் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வந்தாலும், மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் முழு கட்டுக்குள் வரவில்லை. மற்ற மாவட்டங்களில், கோர்ட்களில் குறைந்த வழக்கில் நேரடி விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவை மாவட்டத்தில், வழக்கு விசாரணையில் தளர்வுகள் அளிக்கப்பப்படவில்லை. இதுதொடர்பாக, கோவை மாவட்ட நீதிபதி சக்திவேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘அனைத்து நீதிமன்றத்திலும், முக்கிய வழக்கில் காணொலி வாயிலாக விசாரணை நடைபெறுவது, வரும் 4ம் தேதி வரை தொடரும். புதிய வழக்கை தாக்கல் செய்வோர், அதற்கான ஆவணங்களை முன்கூட்டியே டிராப் பாக்சில் போட வேண்டும். நீதிமன்ற ஊழியர்கள், சுழற்சி முறையில், 50 சதவிகிதம் பேர் பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.