பொள்ளாச்சி அருகே கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள்... ஆம்புலன்ஸ் வழங்கல்..!

கோவை: ராயல் என்ஃபீல்டு நிறுவன அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சி அருகே கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இரண்டு கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டன.


கோவை: ராயல் என்ஃபீல்டு நிறுவன அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சி அருகே கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இரண்டு கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டன.

இந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு அறக்கட்டளை சார்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தற்போது நிலவி வரும் இரண்டாம் அலை கொரோனோ பெருந்தொற்று நெருக்கடியை சமாளிக்கும் வகையில் நிவாரணமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ 2 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் செறியூட்டிகள், எக்ஸ்ரே கருவிகள், தெர்மா மீட்டர், இ.சி.ஜி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கினர். மேலும் ஆக்சிஜன் சிலிண்டர், மற்றும் இதர மருத்துவ வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸும் வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட மருத்துவ சேவைகள் இணை இயக்குநர் Dr.செந்தில்குமார் மற்றும் என்.எம்.சிடி சேவை நிறுவன அறங்காவலர் சத்தியநாராயணன் கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் நெகமம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் சபரி கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...