கோவை அருகே உள்ள மலைக்கிராம குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் மற்றும் நல திட்ட உதவிகள்: வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்

கோவை: காருண்யா பல்கலைகழகம் சார்பாக கோவை அருகே உள்ள 500 மலைக்கிராம குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் மற்றும் நல திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.



கோவை: காருண்யா பல்கலைகழகம் சார்பாக கோவை அருகே உள்ள 500 மலைக்கிராம குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் மற்றும் நல திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

கோவை காருண்யா பல்கலைகழகம் சார்பாக மலைக்கிராம மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல் மற்றும் நலத் திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.



வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்த விழாவில் 500 மலைக்கிராம மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கப்பட்டது.



பின்னர், மலைக்கிராம பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத் திட்டங்களை அமைச்சர் வழங்கினார்.



இதைத் தொடர்ந்து சீஷா மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்கான ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய மையம் மற்றும் முதல்வர் காப்பீட்டு சேவையைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், ‘‘கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி மிக அவசியமான ஒன்று. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்கு முன் உதாரணமாக உள்ளது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை தமிழகத்தில் கொண்டு வந்த பல்வேறு முக்கிய திட்டங்களையும் திமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன. தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள் கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிட்டால், திமுக ஆட்சியில் மட்டுமே மிக முக்கயமான திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தியது தெரியும்.

தமிழகம் மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருந்தபோது முதல்வர் பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், பல்வேறு கொரோனா தடுப்புப் பணிகளை அயராது செய்து வருகிறார். கோவை மாவட்டத்தில் ஐந்தாயிரம் என தினசரி பாதிப்பு இருந்த நிலையில் தற்போது, வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கோவை வந்த முதல்வர் பாதுகாப்பு உடையணிந்து, நேரடியாக கொரோனா சிகிச்சை மையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தார்'' என தெரிவித்தார்.

இதையடுத்து நண்டாந்துறை தடுப்பணையை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு வண்டல் எடுப்பதில் விவசாயிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து பேசிய அவர், ‘‘வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்து பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் மீண்டும் மழை நீரால் மண் அடித்துச் செல்லப்பட்டு தடுப்பணையில் மண் சேர்ந்து விடும்'' என தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...