கோவையில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு..!

கோவை: கோவையில் பள்ளிகளில் நேற்று முதல் சேர்க்கை பணிகள் தொடங்கியதோடு, பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்கலாம் என தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் பள்ளிகளில் நேற்று முதல் சேர்க்கை பணிகள் தொடங்கியதோடு, பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்கலாம் என தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், 1,386 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும், 2 லட்சத்து, 35 ஆயிரத்து, 618 மாணவர்களுக்கு, புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, கலெக்டர் சமீரன், நேற்று பாடப்புத்தகங்களை வழங்கி இதனை தொடங்கி வைத்தார். பள்ளிகளில் உரிய சமூக இடைவெளி பின்பற்றி, சேர்க்கை பணிகள் மேற்கொள்வதோடு, பெற்றோரை காத்திருக்க வைக்காமல், பாடப்புத்தகங்களை உடனே வழங்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமாக, புத்தகப்பையுடன் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். ஆட்சி மாற்றம் காரணமாக, பழைய புத்தகப்பையில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் புகைப்படம் இருப்பதால், தற்போது புத்தகங்கள் மட்டுமே, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், ‘‘சேர்க்கை பணிகளோடு, பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில், பாடவாரியாக பெற்ற அதிகபட்ச மதிப்பெண்கள், பத்தாம் வகுப்புக்கு கணக்கிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதாத, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, 35 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இது, தேர்வுத்துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ் அல்ல. அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் கையொப்பமிட்டு, பிளஸ் 1 சேர்க்கை மற்றும் பாலிடெக்னிக் சேர்க்கைக்காக மட்டும் வழங்கப்படுகிறது'' என்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...