கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் பாதுகாப்பு காரணமாக கோவையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், திங்கள் கிழமை தோறும் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக கூட்டம் நிறுத்திவைக்கப்பட்டு, புகார் பெட்டியில் மனுக்களை போட்டுச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிலையில், ஊரடங்கு தளர்வு காரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள, 11 தாலுக்கா அலுவலகங்கள் வாயிலாக ஆன்லைன் குறைதீர் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. பொது மக்கள் தாலுக்கா அலுவலகங்களுக்கு சென்று, காணொலி வழியாக குறைகளை நேரடியாக கலெக்டரிடம் தெரிவித்தனர். வரும் வாரங்களிலும் ஆன்லைன் வாயிலாக குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், பிற துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தாலுக்கா அலுவலகங்களில் கொடுக்கப்படும் மனுக்கள், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளன.