வால்பாறையில் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகச் சாலையை சீரமைக்க கோரிக்கை..!

கோவை: வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத் தேயிலைத் தோட்டப் பகுதியில் சாலை புதர் மண்டிக் கிடக்கிறது. இதனை சீரமைக்க வேண்டி கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத் தேயிலைத் தோட்டப் பகுதியில் சாலை புதர் மண்டிக் கிடக்கிறது. இதனை சீரமைக்க வேண்டி கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத் தேயிலைத் தோட்டத்தில் உள்ள நீரார் அணை செல்லும் சாலையின் இருபுறமும் கடந்த நான்கு ஆண்டுகளாக புதர் மண்டிக் கிடக்கிறது. இதேநிலைதான் அநக்ச் சாலை வழியாகச் செல்லும் ரயான் டிவிசன் சாலையும். அதேபோன்று புதர் மண்டிக் கிடக்கும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தப் புதர்களை அகற்றும் பணியை மேற் கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், அப்பகுதி பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதைக் கருத்தில் கொண்டு, அந்த வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுதாகர் தலைமையில் பொது நலன் கருதி, அந்தப் புதர் சூழ்ந்த பகுதிகளை இன்று வெட்டி சீர்படுத்தி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வனவிலங்குகள் அதிகமாக நடமாடும் அப்பகுதிகளில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் முன்பு மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு நலன் கருதி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...