இரண்டு மாதங்களுக்குப் பின்பு கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு வியாபாரிகள் வருகை அதிகரிப்பு..!

கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் இருந்தநிலையில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்குப் பின்பு கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு வியாபாரிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் இருந்தநிலையில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்குப் பின்பு கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு வியாபாரிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வந்ததால் கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு குறையாத காரணத்தால் தொடர்ந்து முழு ஊரடங்கு நீடித்து வந்தது.

இந்தநிலையில், கொரோனா காரணமாக கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வராத காரணத்தால் விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள் விற்பனை செய்யமுடியாததால் காய்கறிகள் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டிருந்தது.



தற்போது, கோவை மாவட்டத்திற்கு பொதுமுடக்கத்தில் இருந்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு வியாபாரிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இன்று கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு கேரளா, கோவை, திருப்பூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து, விவசாயிகள் கொண்டு வந்த தக்காளி, பச்சை மிளகாய், கொத்தவரங்காய் உள்ளிட்ட காய்கறிகளை ஏலம் எடுத்து வாங்கிச் சென்றனர்.



இதனால், இரண்டு மாதங்களுக்குப் பின்பு கிணத்துக்கடவு காய்கறி சந்தை மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...