கோவையில் சாலையோர வியாபாரிகளிடம் நூதன நிதி மோசடி: G pay, Paytm உள்ளிட்ட ஆன்லைன் பணம் செயலி மூலம் செலுத்தும் பணம் வங்கிக் கணக்கில் சேர்வதில்லை!

கோவை: கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சாலையோர காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சாலையோர காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலானவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத நிலையில், மிகுந்த அச்சத்துக்கு இடையே தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தினமும் வழக்கம் போல் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த சில நாட்களாக சாலையோர வியாபாரிகளிடம் நூதன முறையில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறும் வியாபாரிகள், G pay, Paytm உள்ளிட்ட பல ஆன்லைன் பணம் செயலி மூலம் செலுத்தும் பணம் வங்கிக் கணக்கில் சேர்வதில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து விளாங்குறிச்சி ரோட்டில் சாலையோரம் காய்கறி மற்றும் பழங்கள் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் கூறியதாவது,



நாங்கள் பொருட்களை விற்பனை செய்யும் பொழுது வாடிக்கையாளர்களிடம் பணம் பெறுவதற்கு உதவும் வகையில் G pay, Paytm உள்ளிட்ட பல ஆன்லைன் செயலி ஸ்கேனர்களை எங்களிடம் சிலர் விற்பனை செய்து உள்ளனர். வாடிக்கையாளர்கள் ஸ்கேனர் மூலம் பணம் செலுத்தும் பொழுது அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் எங்கள் மொபைல் போன் எண்களிலும் பணம் செலுத்த பட்டுள்ளதாக மெசேஜ் வருகிறது.

ஆனால், வங்கி அல்லது ஏடிஎம் மெஷின்களில் சென்று பணம் எடுக்க முயன்றால் எங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து ஸ்கேனர் வழங்கிய நபர்களிடம் நாங்கள் பலமுறை புகார் தெரிவித்த போதும் நீங்கள் உங்கள் வங்கி ஸ்டேட்மென்ட் எடுத்து வாருங்கள், நாங்கள் இரண்டு நாட்களில் வருகிறோம் என்று தொடர்ந்து காரணங்களை மட்டுமே கூறி அலைக்கழிக்கின்றனர். நான் தற்பொழுது கடை நடத்தி வரும் விளாங்குறிச்சி ரோட்டில் மட்டும் எனக்கு அருகே கடை நடத்தி வரும் நான்குக்கும் மேற்பட்ட வியாபாரிகள் இதுபோன்ற மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஆயிரக்கணக்கில் பணம் வங்கி கணக்கில் வரவேண்டியுள்ளது. நான்கு வியாபாரிகளுக்கு மட்டும் கடந்த நான்கு நாட்களில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தொகை வங்கி கணக்கில் வரவேண்டியுள்ளது.

ஏற்கனவே நோய்த்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாங்கள் மீளமுடியாமல் தவித்து வருகிறோம். இத்தகைய சூழ்நிலையில் வியாபாரத்தை எளிமையாக நடத்த உதவும் என நம்பி இதுபோன்ற ஸ்கேனர்களை வாங்கி மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளோம். இப்பிரச்சனை குறித்து யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. அதே போல் எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வியாபாரத்தை விட்டு இதற்கென நேரம் செலவிடுவதும் மிகுந்த சவாலாக உள்ளது.

எனவே, அரசு அதிகாரிகள் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு இதுபோன்ற நிதி மோசடி குறித்து உண்மை கண்டறிய வேண்டும். மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு தெரிந்து பல வியாபாரிகள் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும்தானா அல்லது தமிழகம் முழுவதும் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளதா என்பதை உடனடியாக கண்டறிந்தால் மிகப்பெரிய ஏமாற்றத்தை வியாபாரிகள் சந்திப்பதை தவிர்க்க உதவும்." இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...