கோவை: வால்பாறை அருகே பெரியகல்லார் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழல் குடையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சின்கோனா பகுதியில் வால்பாறை நகராட்சியால் கடந்த 15 ஆண்டுக்கு முன் பல இடங்களிலும் பயணிகள் நிழல் குடைகள் கட்டப்பட்டது.
கடந்த சில ஆண்டுக்கு முன் சின்கோனா முதல் சின்னக்கல்லார் வரையிலான சில நிழல் குடைகள் மறு புனரமைப்பு செய்யப்பட்டது. ஆனால், பெரியகல்லார், 5வது டிவிசன் மற்றும் ரயான் டிவிசன் பகுதிகளில் உள்ள பயணியர் நிழல் குடைகள் மட்டும் எவ்வித புனரமைப்பும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், அவைகள் தற்போது மிகவும் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இது சம்மந்தமாக பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை நிழல் குடைகள் எவ்வித புனரமைப்பும் செய்யப்படாமல் உள்ளது.

குறிப்பாக, 5வது டிவிசன் பகுதியில் அமைந்துள்ள நிழல் குடை கட்டியது முதல் கூரை மிகவும் பலவீனமாக உள்ளது. மழை காலத்தில் மழைநீர், கூரை வழியே உள்ளே வருகிறது. எந்த நேரத்திலும் அது உடைந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே, உயிர்சேதம் ஏற்படும் முன்பு நகராட்சி நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட நிழற்குடைகளை பராமரித்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.