கோவை: கோவை மாவட்டம், அன்னூர் அருகே மது பாட்டில்கள் கடத்திய இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை: கோவை, அன்னூர் அருகே மது பாட்டில்கள் கடத்திய இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாவட்டம், அன்னுார் அருகே கரியாம்பாளையத்தில் நேற்று எஸ்.ஐ., சிலம்பரசன் தலைமையில், போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு, மது பாட்டில்களை மாற்றிக் கொண்டிருந்தது. போலீசார் உடனே அவர்களை வளைத்து பிடித்தனர்.
இதனையடுத்து, ஈரோடு மாவட்டம் நல்லுாரை சேர்ந்த தினேஷ்குமார்(28), திருப்பூர் மாவட்டம் கோமங்கலத்தை சேர்ந்த டிரைவர் கோபாலகிருஷ்ணன்(35) ஆகிய இருவரும் பிடிபட்டனர். உடுமலையை சேர்ந்த கார் உரிமையாளர் அருண்(40) தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்த விசாரணையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 467 குவாட்டர் பாட்டில் மது வகைகளை அருண் வாங்கி, தினேஷ்குமாருக்கு கொடுப்பதற்கு காரில் கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, போலீசார் இரண்டு சொகுசு கார்களையும், 467 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அன்னுார் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய அருணை தேடி வருகின்றனர்.